(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 4, 2018

கீழக்கரை - மங்களேஸ்வரி மினி பஸ் சேவை நிறூத்தம்!!

No comments :
கீழக்கரையிலிருந்து மங்களேஸ்வரி நகர் வழியாக சென்று கொண்டிருந்தமினி பஸ் சேவை கடந்த சில நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் மினிபஸ்சை நம்பியுள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

கீழக்கரையில் இருந்து 500 பிளாட், மாலாகுண்டு, இந்திராநகர், திருவள்ளுவர் நகர், சின்னமாயாகுள், முத்துராஜ் நகர், பாரதிநகர், பெரிய நைனார் அப்பா தர்கா வழியாகபுல்லந்தை மங்களேஸ்வரி நகர் வரை மினி பஸ்சின் வழித்தடம் உள்ளது. பள்ளி, கல்லுாரி நேரங்களில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிக பயனுள்ளதாக உள்ளது.



கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றி அடைத்துக்கொண்டு, மினிபஸ் செல்லும் வழித்தடங்களில் டிக்கெட் போட்டு ஏற்றி வருவதால், அதிருப்தியடைந்த மினி்பஸ் நிர்வாகத்தினர் சேவையை நிறுத்தியுள்ளனர்.

மினிபஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு கூறியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியில்லாமல் மினிபஸ் செல்லும் வழித்தடத்தில், அதிகளவு விபத்து ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடரவே செய்கிறது.
பஸ்சில் குறைவான வருவாயை ஈட்டுவதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மின் பஸ் இயங்கும், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment