(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 1, 2019

ராமநாதபுர மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகள்!!

No comments :

நான் வெற்றி பெற்றால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்களி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி கமுதி அருகே அபிராமத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, இப்பகுதி பெண்களுக்கு சுய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாநிலச் சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க எனது சொந்த பணத்தில் உதவி செய்வேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். பரமக்குடியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.

பின்னர், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார்  பேசுகையில், அபிராமத்தில் பேருந்து நிலைய வளாகம், குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment