(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 1, 2019

முதல்வர் மீது செருப்பு வீசி தாக்க முயற்சி; பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீசி தாக்க முயற்சி!!

No comments :

தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் வாகனம் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது முதல்வர் மீது படவில்லை. செருப்பு வீசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மீது பெரியப்பட்டினம் பகுதியில் பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பாட்டில் பட்டு அவர் காயமடைந்துள்ளார்.


இதெல்லாம் ஓட்டுக்காக தாங்களாகவே திட்டமிட்டு நடத்திக்கொள்ளக்கூடிய நாடகம் என்றும் ஒரு சாரார் கூறிக்கொள்கின்றனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment