(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்தி:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஆகவே சம்பந்தப்பட்டோர் விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment