(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 23, 2022

ராமநாதபுரத்தில் மார்ச் 25 ஆம் தேதி ராணுவத்தில் சேர்வதற்கான கருத்தரங்கம்!!

No comments :

ராணுவத்தில் சேர்வதற்கான தகுதி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் மார்ச் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான பல்வேறு வேலைவாய்ப்புகள், தகுதிகள், தேர்வுகள் மற்றும் தயார்படுத்திக் கொள்வதற்கான கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

 


கருத்தரங்கம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் மார்ச் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில், திருச்சி கன்டோன்மென்ட் ராணுவ சேர்க்கை அலுவலகம் சார்பில் ராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அலுவலர்கள் மூலம் விளக்கமளிக்கப்படவுள்ளது.

 

ஆகவே, இந்திய ராணுவ சேவையில் பணியாற்ற ஆர்வமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடையலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment