(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 9, 2015

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 24ஆவது விளையாட்டு விழா

No comments :
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 24ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளியின் தலைவர் கே.ஆர். பார்த்தசாரதி தலைமை வகித்தார். பள்ளி செயலர் ஏ. ராமதாஸ், அரிமா சங்கத் தலைவர் வி. ஜெகநாதன், மூத்த வழக்குரைஞர் ஜி. கோபால், ஏ.வி. குமாரசாமி, பேராசிரியர்கள் எம். மனோகரன், எம். மணிமாறன், தொழில் அதிபர் கே.வி.எஸ். பாண்டியன், இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதல்வர் பரிமளா டி. அந்தோணி வரவேற்றார்.பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வி. பழனியாண்டி விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்துப் பேசினார்.

விளையாட்டு ஆண்டறிக்கையினை உடற்கல்வி ஆசிரியர் சரவணக்குமார் வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை துணை முதல்வர் எம். திருஞானம் தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

No comments :

Post a Comment