(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 9, 2015

ராமநாதபுரம் வருகிறார் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம்

No comments :

ராமநாதபுரம்:செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி 13ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ராமநாதபுரம் வருகிறார்.

இது குறித்து பள்ளியின் தாளாளர் பாபு அப்துல்லா, செயலர் சின்னதுரை அப்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்து கொள்கிறார். விழாவில் இப்பள்ளியில் படித்து தற்போது மருத்துவர்களாக பணியாற்றுபவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்

No comments :

Post a Comment