(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 15, 2015

756 நபர்கள் பணிநியமனம் பெற்றனர் - ராமநாதபுரம் வேலை வாய்ப்பு முகாமில்.

No comments :
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில், சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 756 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், கிராமப்புற படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமில் 23 தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களில் பணி செய்ய ஆட்களைத் தேர்வு செய்தனர்.
முகாமில் 1898 இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களில் 756 பேர் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. முகாமுக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் எம்.ஜெயராமன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சா.கணேசமூர்த்தி,உதவித் திட்ட அலுவலர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments :

Post a Comment