(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 17, 2015

கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் கலைப் போட்டிகளுக்கு சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்

No comments :

கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளுக்கு சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 22ம் தேதி கடைசி நாளாகும்.  கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை மாவட்ட அளவிலான பல்வேறு கலைப் போட் டிகள் நடைபெற உள்ளன. பிரி பிரைமரி முதல் 6ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பெயிண்டிங், கதை சொல்லுதல், பாடுதல், மிமிக்ரி, அட்டை தயாரித் தல், ஸ்கிராப் வேலை உள்ளிட்ட பல்வேறு போட் டிகள் நடத்தப்பட உள்ளன. பிரி பிரைமரி, 1 மற்றும் 2ம் வகுப்பு, 3 மற்றும் 4ம் வகுப்பு, 5 மற்றும் 6ம் வகுப்பு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிபட்டறை(ஒர்க்ஷாப்) நடத்தப்படுகிறது. இதில் களிமண், மெழுகு தயாரிப்புகள், பெண் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வளர்த்தல், சமையல், மெகந்தி தயாரித்தல், பேப்பர் கட்டிங் டிஷைனிங், ஹேர் டிஷை னிங் ஆகிய பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டி மற்றும் பயிற்சி பட்டறையில் பங்கேற்போர் வரும் 22ம் தேதிக்குள் கண்ணாடிவாப்பா இன்டர் நேஷனல் பள்ளி முதல்வரிடம், 99408 68446 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி முதல்வர் ராஜேஷ் கிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தி: தினகரன்

No comments :

Post a Comment