(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 10, 2015

பாம்பன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவ, மாணவிகள் அமரும் மரத்தாலான மேசைகள்

No comments :
மண்டபம் ஒன்றியம், பாம்பன் ஊராட்சி, பாம்பன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய். 5.00 ( ஐந்து லட்சம் ) செலவில் மாணவ, மாணவிகள் அமரும் மரத்தாலான மேசை நாற்காலிகளைமனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் பள்ளிக்கு வழங்கி மாணாக்கர்களிடையே கலந்துரையாடினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறும்போது :- கல்வி நிலையங்களின் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை நான் செய்திருக்கின்றேன், அதிலும் குறிப்பாக நமது ராமேசுவரம் தீவுப்பகுதியில் கல்வி மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய்.59.00 ( ஐம்பத்தி ஒன்பது லட்சம் ) என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகள் நடைபெற்றுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி அரசு ஒதுக்கியது ரூபாய். எட்டு கோடி ஆகும். அதில் சுமார் ஒரு கோடியே அறுபத்தி எட்டு லட்சம் ரூபாய் பள்ளிக்கூட கட்டிடங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு கூடங்கள் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் இந்த பாம்பன் அரசு பள்ளிக்கூடம் உயர்நிலைப்பள்ளியாக இருந்து தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதற்காக இங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஜமாஅத்தார்கள், மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் இவ்விஷயம் சம்பந்தமாக என்னிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து
உடனடியாக இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசியதுடன் அப்போதிருந்த பள்ளி கல்வி அமைச்சர் அவர்களிடம் இப்பகுதியின் வளர்ச்சி நிலைகள் இதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்து அதன்பின் அரசால் இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது.
அதற்காக இந்த நேரத்தில் தமிழக அரசுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நபார்டு நிதி உதவியுடன் இப்பள்ளிக்கு மேலதிக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்காக முயற்சிகள் செய்வேன் என்று சுட்டி காட்டினார்கள்.
இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டாலும் நீண்ட காலமாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்து வந்தது. அந்த குறையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய நண்பர் திரு.K.C.வீரமணி அவர்களிடம் எடுத்துக்கூறி தற்போது இங்கு போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இருப்பினும் தற்போது நிரந்தர தலைமை ஆசிரியர் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையும் பள்ளிகல்வி அமைச்சர் அவர்களிடம் கூறி அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சி செய்வேன் எனக்கூறினார்கள்.
இப்பள்ளியின் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இப்பள்ளியில் தன்னலம் பாராமல் பணிசெய்துவரும் இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், ஊர் பிரமுகர்களுக்கும், ஜமாத்தார்களுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சகோ.பேட்ரிக் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு
இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறியது மேற்கண்ட அனைவரின் முயற்சியை விடவும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் எனது பங்களிப்பும் இப்பள்ளிக்கு அதிகமாகவே உள்ளது.
என்னதான் நாங்கள் எல்லாம் பாடுபட்டாலும் மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. என்றுகூறி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலதரப்பட்ட சிறந்த முன்னோடிகளான கல்வியாளர்களை எடுத்துக்காட்டாக கூறி நீங்களும் அதுபோல் பெரிய கல்விமான்களாக, அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக, அரசுத்துறை உயர் அதிகாரிகளாக வரவேண்டும் எனக்கூறி நெருங்கி வரும் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மாணவர்களாக வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அதற்காக இப்போதிலிருந்தே உங்களின் கவனத்தை தொலைக்காட்சி, கைபேசி என என்னென்ன சாதனங்கள் எல்லாம் உங்களின் கவனத்தை திசை திருப்புமோ அத்தகைய அத்துணை தேவையில்லாத வேலைகளை விட்டும் ஒதுங்கி படிப்பில் நல்ல கவனம் செலுத்தி நன்றாக படித்து முன்னேற வேண்டும். என மாணவர்களை வாழ்த்தி அவர்களின் உரையை நிறைவு செய்தார்கள்.
அதன்பின் பேசிய ஜமாஅத் நிர்வாகிகள் பேசும்போது சட்டமன்ற உறுப்பினரின் பணிகளை மிகவும் பாராட்டி வாழ்த்தி பேசி மாணவர்களிடையே நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கூறி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஜமாஅத் சார்பாகவும், ஊரின் சார்பாகவும் அவர்களின் நன்றியை கூறினார்கள்.
அதுபோல் ஊராட்சி மன்ற தலைவர் சகோ.பேட்ரிக் அவர்கள் பேசும்போது உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்ததற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டிருக்கின்றார்கள்.
அதை என்றென்றும் இந்த பாம்பன் பொதுமக்கள் மறக்க மாட்டோம். 200 பிள்ளைகள் வெளியூர் சென்று தங்களது படிப்பை மேல்நிலைப்பள்ளியில் தொடர வேண்டிய சூழ்நிலையில் தக்க சமயத்தில் உதவி செய்து இங்கேயே அவர்கள் அனைவரும் படித்து முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் ரூ.ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாணாக்கர்கள் அமர்ந்து கல்வி பயில்வதற்கு ஏதுவாக மரத்திலான மேசை,நாற்காலிகளை வழங்கி உதவியதற்கு ஊர் சார்பாக அவர்களின் நன்றியை தெரிவித்தார்கள்.
இப்பள்ளியில் தற்போது எட்டு முதுநிலை ஆசிரியர்களுடன் ஆசிரியர்கள் பத்து பேர், ஆசிரியைகள் 13 பேர் என மொத்தம் 23 நபர்கள் பணியில் உள்ளார்கள், இங்கு +2 மாணவர்கள் 83, +1 மாணவர்கள் 85 பேர் உட்பட 599 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றார்கள். இதில் சென்ற கல்வி ஆண்டில் நல்ல தேர்ச்சி விகிதம் கிடைத்தது அதுபோல் இவ்வருடமும் எதிர் பார்க்கப்படுகிறது.
இங்கு ரூ.ஐந்து லட்சம் செலவில் வழங்கப்பட்ட 39 மேசை, நாற்காலிகள் முதற்கட்டமாக சுமார் 200 மேல்நிலை மாணவர்கள் வரை அமர்ந்து கல்வி பயிலும் வண்ணம் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் +2 படிக்கும் 83 மாணவ, மாணவிகளுக்கு இவ்வருட தேர்விற்கான ஹால் டிக்கெட் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிராம கல்விக்குழு தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான திரு.பேட்ரிக் அவர்களால் வழங்கப்பட்டது.
பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு திருமதி.C.R.சுதா குமாரி M.sc.,M.Ed., முன்னதாக வரவேற்புரை உதவி தலைமை ஆசிரியர் திரு.J.பென்சிகர் அவர்கள், முடிவில் நன்றியுரை பட்டதாரி ஆசிரியர் திரு.A.ஜஸ்டின் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜனாப்.அப்பா ஜமால் அவர்களும் , ஊர் முக்கியஸ்தர் சிறப்பு அழைப்பாளர் ஜனாப்.அயூப்கான் அவர்களும்,
மற்றும் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் சகோ.B.அன்வர் அலி, பாக்கர் அலி, சக்கரக்கோட்டை மைதீன், நூருல் அஃப்பான், பாம்பன் மீரா உசேன், மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: MLA அலுவலகம், இராமநாதபுரம்

No comments :

Post a Comment