(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 1, 2015

ராமேஸ்வரத்தில் புறவழிச்சாலை அமைக்க சட்டசபையில் MLA கோரிக்கை!! -

No comments :
ராமேஸ்வரத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் சட்டப்பேரவையில் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை:

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டமன்ற கூட்டதொடர்களில் கேள்வி நேரத்தின் போது தொகுதி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றேன்.
அந்த வகையில் 30.03.2015 அன்று நடைபெற்ற 2015-2016 ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ராமேஸ்வரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பினேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
எனது தொகுதியில் உள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு வெளியூர்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் இராமநாத சுவாமி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களும் வருவதால் போக்குவரத்து மிகுதியாக இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
மேலும், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு வண்டிகள்கூட ராமேஸ்வரம் நகரத்திற்குள்ளே வந்துதான் செல்லக்கூடிய ஒர் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒரு சூழலிலே, நேரடியாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கக்கூடியவகையில்,
வட்டச் சாலை அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் முன்வருவார்களா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன். என்று நான் எழுப்பிய கேள்விக்கு
மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அளித்த பதில்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ராமேஸ்வரம் பகுதியிலே போக்குவரத்து நெரிசல் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளபடி படிப்படியாக எங்கெங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதோ,
அந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும், நிதிநிலைக்கேற்ப புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வைத்த கோரிக்கையையும் அரசு பரிசீலிக்கும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே ராமேஸ்வரம் நகருக்குள் செல்லாமல் நேரடியாக மீன்பிடி துறைமுகம் செல்லும் வகையில் புறவழிச்சாலை விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் கூறினார்கள்.
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்

No comments :

Post a Comment