(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 28, 2015

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக புதிய கட்டிடம், முதல்வர் திறந்து வைத்தார்.!!

No comments :

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும்,

இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசுக்கு தேவையில்லாத வாடகை செலவினங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் எண்ணத்துடனும் கடந்த 2012 ம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வெட்டுத்தீர்மானம் வாயிலாக இது சம்பந்தமான விரிவானதொரு கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்ததன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்துவரும் தமிழக அரசு இக்கோரிக்கையினை பரிசீலித்து ஆய்வு செய்து பல அரசு நடவடிக்கைகளுக்குப்பின் ராமநாதபுரம் பாரதிநகர் அருகில் உள்ள “டி” பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, ரூ.1.50 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.


புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்பை பதியவும், பயிற்சி வகுப்புகள் நடத்தவும், தனியார் துறையினர் நேர்முகத்தேர்வு நடத்தவும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 1,55,197 பதிவுதாரர்களுக்கும், இனி பதிவு செய்ய வருபவர்களுக்கும் இப்புதிய கட்டடம் வசதியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த புதிய கட்டடத்தை சென்னையில் இருந்தவாறு "வீடியோ கான்பரன்சிங்' மூலம் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

ராமநாதபுரத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரும், பயனாளிகள் சிலரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களும்,
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும்,
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகன் எம்.எல்.ஏ அவர்களும், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்க மரைக்காயர் அவர்களும்,
பட்டிணம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராமருது மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் நாகேஸ்வரி சண்முகவேல், பொதுப் பணித்துறை பொறியாளர்கள் எம்.மணி, உதவி செயற்பொறியாளர் டி.குருதிவேல்மாறன் மற்றும்
வேலைவாய்ப்பு அலுவலக மதுரை மண்டல இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹரிஹரன்பாபு மற்றும் தனபாலகிருஷ்ணன், நாகவினோத் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

No comments :

Post a Comment