(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 28, 2015

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது!!

No comments :
ராமநாதபுரம் : ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராம மூர்த்தி. கடந்த 3 ம் தேதி டூ வீலர் ஸ்டாண்டில் நிறுத்தி சென்றார். இந்த வாகனம் காணவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தார். பைக் ராமநாதபுரத்தில் இருந்தது . இந்த பைக்கை பெற வேண்டுமானால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் முருகன் கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராமமூர்த்தி புகார் கொடுத்தார். 


இதன்படி இன்ஸ்பெக்டர் முருகன் ரூ 3 ஆயிரம் பெறும் போது டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் , ஜானகி ஆகியோர் கொண்ட படையினர் கைது செய்தனர்.

மேலும் லஞ்சமாக கொடுத்த ரூ.3 ஆயிரம் மற்றும் முருகனின் பையில் இருந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி: திரு கார்த்திக், இராமநாதபுரம் - தினசரிகள் வழி.

No comments :

Post a Comment