(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 28, 2015

மதுரை-ராமநாதபுரம் பேருந்து மீது லாரி மோதி விபத்து, ஒருவர் இறப்பு!!

No comments :


பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் விலக்கு ரோட்டில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணி ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

 மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இது பரமக்குடியை கடந்து வாகைக்குளம் விலக்கு சாலையில் வந்த போது பின்னால் வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் நாகராஜின் (36) கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 விபத்தில் பலியான நாகராஜ் மதுரையில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல் இவர் வார விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வருவதற்காக மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் நாகராஜ் மனைவி சூரியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


No comments :

Post a Comment