(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 25, 2015

ராமநாதபுரம் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது!!

No comments :
ராமநாதபுரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழா, கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினசரி சுவாமி வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 21 ஆம் தேதி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீசீதா தேவிக்கும் ஸ்ரீ கோதண்டராமருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.


 அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி. மகேந்திரன் தலைமையில், சரக அலுவலர் சி. சுவாமிநாதன் மேற்பார்வையில், கோயில் கண்காணிப்பாளர் எஸ். கண்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment