(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 25, 2015

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்கியது, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :
மதுரை ராமநாதபுரம் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது!


மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை-ராமநாதபுரம் இடையே சுமார் 115 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதில், மதுரை-பரமக்குடி இடையே நான்கு வழிச் சாலையாகவும், பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 10 மீட்டர் அகலச் சாலையாகவும் அமைக்கப்படும். ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைக்கிறது.

மதுரை விரகனூர் பகுதியில் தொடங்கி ராமநாதபுரம் வரை 115 கி.மீ-க்கு இந்தச் சாலை அமைக்கப்படுகிறது.
இதில், 40 புறவழிச் சாலைகள், 9 ரயில்வே மேம்பாலங்கள் அமைய உள்ளன.

இந்த நான்கு வழிச் சாலை மதுரை விரகனூரில் சுற்றுச் சாலை சந்திப்பில் இருந்து புறவழிச் சாலையாக 8 கி.மீ.-க்கு அமைக்கப்பட்டு சிலைமான் பகுதியில் இணைகிறது. அதைத் தொடர்ந்து திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, காட்டு பரமக்குடி உள்பட ராமநாதபுரம் வரை 40 புறவழிச் சாலைகள் அமைகின்றன.

இந்த சாலைக்கு ரூ.1,387 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.


இதற்கான பணிகள் துவங்கி சாலைகள் இருபுறமும் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு அகலப்படுத்தும் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


No comments :

Post a Comment