(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 22, 2015

சென்னை-ராமநாதபுரம் விரைவு பேருந்து விபத்துக்குள்ளானது, பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர்!!

No comments :
ராமநாதபுரம் அருகே விரைவு பஸ் சாலை தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ் ராமநாதபுரம் அருகே கடற்கரை சாலையில் காலை 5 மணியளவில் வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரம் அருகே இசிஆர் விலக்கு பகுதியில் வளைவு ஒன்றில் பஸ் திரும்பியது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் முன்புறம் 2, பின்புறம் 4 என 6 சக்கரங்களும் கழன்று விழுந்தன. 

இந்த விபத்தில் டிரைவர் வரதன், கண்டக்டர் துரைராஜ் உட்பட 5 பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக தேவிப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments :

Post a Comment