வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Thursday, August 13, 2015

மண்டபம் ஒன்றியம், குயவன்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் சந்திப்பு ! !

No comments :

ராமநாதபுரம் சட்டமன்றம் குயவன்குடி கிராம பொதுமக்கள் அவர்களின் பல கோரிக்கைகள் சம்பந்தமான மனுவினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களிடம் நேரடியாக அளித்தார்கள்.


அதில் அவர்கள் குறைந்த மின் அழுத்த குறைபாடு மற்றும் ஊரின் பிரதான சாலை பேவர் பிளாக்கில் அமைத்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அரசின் சாலைகள் மேம்பாட்டு நிதியின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு இக்கோரிக்கையினை எடுத்துசென்று ஆவண செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் மேலும் குறைந்த மின் அழுத்த குறைபாடுகளுக்கு உடன் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

No comments :

Post a Comment