(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 12, 2015

மக்காவில் நடந்த கிரேன் விபத்தில் 107 பேர் இறப்பு, பாவமன்னிப்பிற்கும், சுவனத்திற்கும் பிராத்திப்போமாக!!

No comments :


மக்காவில் 107 பேரை பலி வாங்கிய கிரேன் விபத்துக்கு இயற்கை சீற்றமே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர். அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 107 பேர் பரிதாபமாக பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வேகத்துடன் காற்று வீசி வருகிறது. இந்த காற்றில் நிலை தடுமாறிய கிரேன், மசூதியின் மேற்கூரை மீது மோதி இரண்டு துண்டாக உடைந்தது. மேற்கூரை உடைந்து உள்ளே இருந்த ஹஜ் பயணிகள் மீது விழுந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ரத்தக் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.


அன்னார்களின் பாவமன்னிப்பிற்கும், சுவனத்திற்கும் பிராத்திப்போமாக, அன்னார்களின் குடும்பங்களுக்கு இறைவன் பொறுமையை வழங்குவானாக!!

உதவிக்கு அழைக்க வேண்டிய சவூதி தொலைபேசி எண்: +966543891481

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment