(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 12, 2015

சர்வதேச தற்காப்புக்கலை போட்டியில் கீழக்கரை கல்லூரி மாணவர் சாதனை!!

No comments :
சர்வதேச தற்காப்புக்கலை போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார். கேரள மாநிலம் திருச்சூரில் பிளாக் டிராகன் தற்காப்புக் கலை மையத்தின் சார்பில் சர்வதேச அளவிலான தற்காப்புக் கலை போட்டி கடந்த மாதம் 29ம் தேதி முதல் 31 வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட 7 வீரர்களில் 3 பேர் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர்கள் ஷேக்பரீத், யாசர்அராபத், கணிதவியல் இரண்டாமாண்டு மாணவர் சேதுபதி ஆகியோர் ஆவர்.


இதில் ஷேக்பரீத், கிக்பாக்சிங் தற்காப்புக் கலை போட்டியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இம்மாணவரை முகமது சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப், இயக்குநர்கள் ஹாமீது இப்ராகீம், அஸ்லம்ஹூசைன், முதல்வர் ரஜபுதீன், உடற்பயிற்சி இயக்குநர் தவசிலிங்கம், நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment