(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 12, 2015

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, தமிழக தலைவர்கள் அஞ்சலி!!

No comments :
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே அமைந்துள்ள அவரது  நினைவிடத்தில் 58-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அதிமுக சார்பில் மாநில அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, எஸ். சுந்தரராஜ், அ. அன்வர்ராஜா எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன், மாவட்ட செயலாளர் ஆர். தர்மர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


தி.மு.க. சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், நகர் செயலாளர்கள் சேதுகருணாநிதி, கார்மேகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை, நகர் தலைவர் எம். அப்துல்அஜீஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட செயலாளர் குட்லக் ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை செவந்தியப்பன், சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, துணை செயலாளர்கள் பசீர்அகமது, பழ.சரவணன், பிச்சைமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. சார்பில் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ. சுபா, மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல்ராவணன், மாநில துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், நகர் செயலாளர் கோவிந்தன் ஆகியோரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அதன் பொறுப்பாளர் இ.சாமுவேல்ராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் கலையரசன், டாக்டர் வான்தமிழ் இளம்பருதி, சி.பி.எம். வி.காசிநாததுரை ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன், மாவட்ட செயலாளர் பீட்டர் வளவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்டத் தலைவர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  முருகவேல்ராஜன், கே.வி.ஆர். ராம்பிரபு, கே.எஸ்.கே. ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஜான்பாண்டியன், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சேகர், டாக்டர் அம்பேத்கர் வழக்குரைஞர் அணி சார்பில் கே.வி.ஆர்.கந்தசாமி, முத்துக்கண்ணன், சி.பசுமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர். சரவணபெருமாள், மாநில துணைத் தலைவர்கள் சுப. நாகராஜன், து. குப்புராமு, மாநில இளைஞரணி செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் கே. சண்முகராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம பொதுமக்கள் சார்பிலும், அவரது குடும்பத்தினர் சார்பில் மகள் பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், இளவரசன், கோமகன் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விழா ஏற்பாடுகளை பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment