(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 5, 2015

ராமநாதபுரம் நகர் காவல்துறை புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு!!

No comments :
ராமநாதபுரம் நகர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அண்ணாமலை ஆழ்வார் ஆக.31-இல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய ஏ.எஸ்.பி.யாக சர்வேஸ்ராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இவர், திருவள்ளூரில் பயிற்சி ஐ.பி.எஸ்.அதிகாரியாக இருந்து பின்னர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, தற்போது ராமநாதபுரம் நகர் ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேறுள்ளார்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்று புதிய ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேற்றதும் சர்வேஸ்ராஜ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளராக சிவகங்கை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரத்தில் கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment