(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 5, 2015

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் சிவில் இஞ்சினியர்கள் வேலை வாய்ப்பு!!

No comments :
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. 4 வருட ஒப்பந்த அடிப்படையில் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரிய உதவி மேலாளர், ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மொத்தம் 31 உதவி மேலாளர்(சிவில்) பணியிடங்கள் காலியாகவுள்ளன.

சம்பளம்:
மாதம் ரூ.20,600 - 46,500 என்ற அடிப்படையில் இருக்கும்.
01.07.2015 தேதியின்படி வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும்.
60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்து 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கேட்(GATE) தேர்வில் போதிய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல ஜூனியர் என்ஜினீயர்(சிவில்) பணியிடங்கள் 100 காத்திருக்கின்றன.

சம்பளம்:
மாதம் ரூ.13,500 - 25,520 என்ற அடிப்படையில் இருக்கும். 01.07.2015 தேதியின்படி வயது 28க்குள் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். எழுத்துத் தேர்வு, கலைந்துரையாடல், நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே வசூலிக்கப்படும். இதற்கான "சலானை" பதிவிறக்கம் செய்து DMRC Account No: 33700092265- என்ற எண்ணில் செலுத்த வேண்டும்.

"சலான்” பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும். www.delhimetrorail.com என்ற இணையதளத்துக்குச் சென்றறு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செப்டம்பர் 23 கடைசி தேதியாகும். செலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 23 ஆகும்.


இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் அறியலாம்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment