(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 19, 2015

குவைத் K- Tic சார்பில் சிறப்பாக நடைபெற்ற இரத்த தான முகாம்!!

No comments :
குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), வெள்ளிக்கிழமை (18/12/2015) பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஜாபிரிய்யா பகுதியில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் மாபெரும் 11வது இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் 120க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

இந்த முகாம் பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள் மட்டுமல்லாமல் குவைத் நாட்டு சகோதரர்களும் கலந்துக் கொண்டனர். சங்கத்தின் "வாழ்நாள் சமூக சேவகர்" விருது பெற்ற திரு டில்லி பாஷா, "வெல்டன் மக்கள் மன்ற" நிறுவனர் திரு கவுஸ், "அல்-அன்பா நாளிதழ்" பொறுப்பாளர்கள், "ஹலா குவைத்" இணைய இதழின் பொறுப்பாளர்கள், "பாகிஸ்தான் குருதிக் கொடையாளர்" சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து தங்களின் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.



இரத்த வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி சங்க நிர்வாகிகள் கூறும் போது, "யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்" என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி, முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் என்பதால் இந்த பணியை பதினொரு வருடங்களாக செய்து வருவதாக கூறினர்.


இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment