(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 15, 2016

கீழக்கரையில் 16,18,23 தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்!!

No comments :
கீழக்கரையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, 3 நாள்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.கீழக்கரை அரசு மருத்துவமனை சார்பாக இம்மாதம்
16ஆம் தேதி கிழக்குத் தெரு அரபி பாடசாலையிலும்,
18இல் வெங்கடேஸ்வரா மகாலிலும்,
23இல் புதுத்தெரு நூரானியா பள்ளியிலும்

இச்சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இதில், பொது மருத்துவம், இருதயம், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். மேலும், தேவைப்படுவோர் அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவர் என, அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தெரிவித்தார்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment