Monday, February 15, 2016
முதுகுளத்தூரில் இருந்து மேலத்தூவல் கிராமத்துக்கு சிறப்புப் பேருந்து!!
முதுகுளத்தூரில் இருந்து மேலத்தூவல் கிராமத்துக்கு
சிறப்புப் பேருந்தை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
முதுகுளத்தூரில் இருந்து கீழத்தூவல், மேலத்தூவல் வழியாக ஆனைசேரி, அபிராமம் செல்வதற்கு
பேருந்து வசதியின்றி அப்பகுதி கிராமத்தினர் அவதிப்பட்டு வந்தனர். அதையடுத்து, பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கிராம மக்கள் அமைச்சர் டாக்டர் எஸ்.
சுந்தரராஜிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மேலத்தூவல் கிராமத்திலிருந்து அரசு சிறப்புப் பேருந்தை சனிக்கிழமை அமைச்சர்
தொடக்கி வைத்தார்.
விழாவுக்கு, அதிமுக ஒன்றியச் செயலர்
மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். கருப்பசாமி தலைமை வகித்தார். முதுகுளத்தூர்
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் இருளப்பன், அவைத் தலைவர்
சிவராமச்சந்திரன்,
பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment