(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 28, 2016

ராமநாதபுரத்தில் நேற்று காலை பலத்த மழை!!

No comments :
ராமநாதபுரத்தில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்து மக்களை குளிர்வித்தது. ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இத்துடன் கடந்த சிலநாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பரிதவித்து வந்தனர். 


இந்நிலையில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்தது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், வேதாளை, குயவன்குடிஉள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 
ராமநாதபுரம் நகரில் அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி தென்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ந்தனர். செய்தி: திரு. தாஹிர், கீழை.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment