(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 25, 2016

ராமநாதபுரம் - சட்டமன்ற தொகுதி விபரம்!!

No comments :
பெரிய மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை நிர்வாகக் காரணங்களுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 14.7.1984இல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என மூன்றாகப் பிரித்தார்.

ராமேசுவரம் கோயிலின் மூன்றாம் பிரகாரம், கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாம்பன் ரயில்பாலம், இந்திரா மேம்பாலம், ஏர்வாடி தர்கா,சிகாகோ பயணம் முடித்து சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பி வந்து முதலில் கால்பதித்த குந்துகால் கடற்கரை, திருஉத்தரகோசமங்கை பச்சைமரகத நடராஜர் திருக்கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் 44 ஆவது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் ஆகியன இத்தொகுதியின் சிறப்புகள்.



ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை உள்ளிட்ட 3 நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரத்தில் உள்ள 9 ஊராட்சிகள், மண்டபத்தில் உள்ள 25 ஊராட்சிகள்,திருப்புல்லாணியில் உள்ள 29 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 69 ஊராட்சிகளை உள்ளடக்கியது. மேலும், ராமநாதபுரம், ராமேசுவரம்,கீழக்கரை நகராட்சிகள், மண்டபத்தில் உள்ள 18 வார்டுகள், 69 கிராம ஊராட்சிகள், ராமநாதபுரம் ஒன்றியத்தில் சித்தூர், இளமனூர், கழனிக்குடி, காருகுடி, மாதவனூர், மாடக்கொட்டான், பேராவூர், தெற்குத்தரவை கிராமங்களும், மண்டபம் ஒன்றியத்தில் ஆற்றங்கரை, என்மணங்கொண்டான், காரான், இருமேனி உள்ளிட்ட கிராமங்களும்,திருப்புல்லாணி ஒன்றியத்தில் முத்துப்பேட்டை, நல்லிருக்கை, நயினாமரைக்கான், பனையடியேந்தல், தில்லையேந்தல், திருப்புல்லாணி உள்ளிட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன.


மொத்த வாக்காளர்கள்
மொத்தம் வாக்காளர்கள் 2,81,563
ஆண்கள் 1,41,031
பெண்கள் 1,40,514
திருநங்கைகள் 18
வாக்குச் சாவடிகள் 321

தேர்தல் அலுவலர்
ராம். பிரதீபன். (கோட்டாட்சியர்)
செல்லிடப்பேசி எண்: 94455 00472.


முந்தைய தேர்தல்களில்
1952  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  26,131
1957  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  40,577
1962  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  44,942
1967  டி .தங்கப்பன் (திமுக)            35,880
1971  எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் (திமுக) 40,690
1977  டி.ராமசாமி (அதிமுக)            33,048
1980  டி.ராமசாமி (அதிமுக)           46,987
1984 டி.ராமசாமி(அதிமுக)             56,342
1989 எம்.எஸ்.கே.ராஜேந்திரன் (திமுக)    38,747
1991 தென்னவன் (அதிமுக)            62,004
1996 ரகுமான்கான் (திமுக)            59,794
2001 அன்வர்ராஜா(அதிமுக)            59,824
2006 ஹசன்அலி(காங்கிரஸ்)            66,922
2011 ஜவாஹிருல்லா(மமக)             65,831


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment