(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 3, 2016

தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற, அப்பகுதி மக்கள் நவம்பர் 10ஆம் தேதிக்குள் வெளியேற நோட்டீஸ்!!

No comments :
தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நவம்பர் 10ஆம் தேதிக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமென வட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் கொடுத்துள்ளதால் மீனவர்களும், வணிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இந்தப் பகுதி கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைஇந்தியாவின் வர்த்தக நகரமாக இருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட பெரும் புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது. அதன்பின்னர் உயிர்தப்பிய மீனவர்கள் மட்டும் இன்றுவரை அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.




இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையேற்று எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அப்பகுதியில் மத்தியமாநில அரசுகள் சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மத்திய,மாநில அரசுகள் நடடிக்கை எடுத்து வருகின்றது.

அதன்பேரில், புயலால் அழிந்துபோனது போக மீதமுள்ள கட்டடங்களை புதுப்பித்தும், தனுஷ்கோடி வரலாறு குறித்து ஒளிஒலியுடன் கூடிய கண்காட்சி அமைக்கவும் அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இதனால் அப்பகுதியில் வசிக்ககூடிய மீனவர்களை வெளியேற்ற மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 

இதற்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக குடிசை அமைத்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நவம்பர் 10ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டுமென ராமேசுவரம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  இதை பெற்றுக்கொண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் மற்றும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கடைகள் வைத்துள்ள வணிகர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment