(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 9, 2017

ராமேஸ்வரம் மத்ரசாவில் குர்ஆன் ஓதும் போட்டி!!

No comments :


ராமேஸ்வரத்தில் இஸ்லாமிய சிறுவர்கள் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது.

ராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் வளாகத்தில் அன்னை பாத்திமா நிஸ்வான் மத்ரசா சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு இதன் தலைவர் ஜான்பாய் தலைமை வகித்தார். முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல்ஹமீது முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் பள்ளிவாசல் பேஷ் இமாம் அப்துல்ரகுமான்செயலாளர் அப்துல்கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குர்ஆன் ஓதும் போட்டி, கிராஅத்போட்டி, பேச்சுப்போட்டி, உரையாடல் மற்றும் கேள்வி-பதில் போட்டியில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்றனர்.


வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு ஜமாத் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அவுரங்கசீப் நன்றி தெரிவித்தார். முஸ்லீம் ஜமாத்தார்கள், பெண்கள் என ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment