(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 5, 2017

108 ஆம்புலன்ஸ் மக்கள் சேவைக்கா? வருமானத்திற்கா?!!

No comments :

அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை மக்களை இலவசமாக சென்றடைவதில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக ரெகுநாதபுரத்திலிருந்து நம் வாசகர் கார்த்திக் மூலம் நமக்கு வந்த தகவல்:

108 ஆம்புலன்ஸ் இலவச சேவை ஊர்தி என்று பெயருக்குத்தான் போல.... கடந்த வியாழக்கிழமை இரெகுநாதபுரத்திலிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவ மணைக்கு ஒரு நோயாளியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்றுள்ளனர்.... அவ்வாறு ஏற்றிச்செல்லப்பட்ட நோயாளியிடம் ரூபாய் 700 வசுலித்துள்ளனர்....அதேபோல் மீண்டும் நமது இரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட நோயாளியிடம் நமது இரெகுநாதபுர அரசு சுகாதார ஊழியர்களே அந்த நோயாளியிடம் ஆம்புலன்ஸ் சுக்கு ரூபாய் 200 குடுத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களும் ஒப்புக்கொண்ட பிறகே ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றுள்ளனர்..... உயிரோடு விளையாடும் அரசு ஊழியர்கள்....


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment