(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 5, 2017

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சியினர் முன்னிலையில்கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் வெளியிட்டனர்.

மாவட்டத்தில், 5 லட்சத்து 61 ஆயிரத்து 868 ஆண்கள்,
5 லட்சத்து 62 ஆயிரத்து 744 பெண்கள்,
67 திருநங்கைகள்,
என 11 லட்சத்து 24 ஆயிரத்து 679 வாக்காளர் உள்ளனர்.

புகைப்பட வாக்காளர் துணைபட்டியல், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், நகராட்சிகளில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


முழுமையான புகைப்பட வாக்காளர் பட்டியல் ஓட்டுச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் 2018 ஜன.,1ல் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அக்.,3 முதல் 31 வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யலாம்.

மேலும், அக்.,7 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் மக்களுக்கு வாசித்து காட்டப்படும். அக்.,8 மற்றும் 22ல் அனைத்து ஓட்டுச்சாவடி களிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

முதன்முறையாக பெயர் சேர்க்க அல்லது ஒரு சட்டசபை தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் மாறி இருந்தால் படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பெயர் சேர்க்க 6 , பெயரை நீக்க 7, பெயர், வயது, பாலினம், உறவுமுறை உள்ளிட்டவை திருத்தம் செய்ய மற்றும் புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment