(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 20, 2018

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.72.27 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல!!

No comments :ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 72.27 லட்சம் ரொக்கம், 135 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,  ரூ.72 லட்சத்து, 27 ஆயிரத்து 307 ரொக்கம், 135 கிராம் தங்கம், 4.150 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், சிவகங்கை இணை ஆணையர் ஜெகநாதன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கோயில் பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment