(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 27, 2020

ஔவையார் விருதுக்கு டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

 

உலக மகளிர் தினவிழாவினையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது வழங்கப்படவுள்ளது.

 


இதற்கு தகுதியான நபர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாகவும், சமூகநலனைச் சேர்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருக்கவேண்டும். தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்கவேண்டும்.

 

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment