(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 4, 2020

முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

No comments :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்படும் முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் பன்னாட்டு அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும்
2 ஆண்கள் 2 பெண்கள் என விளையாட்டு வீரர்கள்,
2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு
முதல்வர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக விருது வழங்குவதற்கு முந்தைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தும்
ஒரு நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர். ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியாருக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in இணைதளம் மூலம் பெற்றுகொள்ளலாம்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment