(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 5, 2020

சித்தார்கோட்டை கிராம சபை கூட்ட தீர்மானங்கள்!!

No comments :
சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 நடைபெற்ற கிராம சபை கூட்டம்

சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் திருமதி.மு.முஸ்தரி ஜஹான் முகம்மது ரைசுதீன்
அவர்களின் தலைமையில் ஊராட்சி பற்றாளர், ஊராட்சி செயலாளர் திரு முனியசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் மக்கள் பாதை பொறுப்பாளர் தினேஷ் குலசை அக்னி சிறகுகள் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஜனவரி 26 கிராம சபைக்கு அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் வாசிக்கப்பட்டவையை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கிராமம் சார்ந்த தீர்மானத்தை முன் வைத்தனர்.

அவற்றில்
விவசாயத்திற்கு ஆற்றில் பாலம் அமைக்க, 
உப்பளத்தில் இருந்து வரும் நீரை விவசாய நீருடன் கலப்பதைத் தடை செய்யவும், 
புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்துத்தரவும், 
தெருவிளக்கு விரிவுபடுத்துதல் 
குடிநீர் குழாய் அமைத்தல் 
நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைத்தல் 
சாலை வசதி 
சமுதாயக்கூடம் 
நீர் நிலைகள் அனைத்தையும் தூர்வாரப்பட்டு அதன் ஓரங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்தல் 

போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கிராம ஊர் தலைவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

செய்தி: திரு. தினேஷ், சித்தார்கோட்டை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment