Tuesday, February 3, 2015
ராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை
ராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் அமீர் திறந்து வைத்தார். துபாய், அபுதாபி, ஷார்ஜா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில் மும்பை, பெங்களுரூ, சென்னை போன்ற நகரங்களிலும் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்று திகழும் டேஸ்ட் ஆப் மும்பை என அழைக்கப்படும் ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா ராமநாதபுரம் பாரதிநகரில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் ஜூஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.நிறுவன பங்குதாரர்கள் முஷம்மில் ஹூசைன், இஸ்திகார் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், சக்கரக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் நூர்முகம்மது, கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகம்மது, தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ஏசியன் கிளாஸ் ஹவுஸ் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் அன்ட் பிரதர்ஸ், பிங் பாந்தர்ஸ் நிறுவன பங்குதாரர்கள், நியூ ஹாரா ஏஜென்சீஸ் நிறுவனர் நூகு அப்துல்காதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஹாஜி அலி நிறுவனத்தின் பங்குதாரர் முஷம்மில் கூறுகையில், மக்களுக்கு இயற்கை உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் என்றார்.
No comments :
Post a Comment