வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, February 21, 2015

ராமேசுவரம் ரயிலில் கொள்ளை

No comments :
பயணிகள் கவனத்திற்கு!!!!

தேவகோட்டை அருகே எழுவன்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா(70). இவர் தேவகோட்டை ரஸ்தாவில் ரயில் வந்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். சகபயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் கருப்பையாவை தேவகோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் பத்து மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

அப்போது கருப்பையா கூறுகையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் சென்னையில் இருந்து நான் வந்து கொண்டிருந்தேன். எனது அருகில் தாய்,மகள்,கணவன் மனைவி உட்பட ஆறுபேர் பயணித்தனர். அதில் ஒருவர், நாங்கள் கோவையில் இருந்து வருகிறோம், ராமநாதபுரத்தில் பெயின்ட் அடிக்கும் பணிக்கு செல்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டார். 
இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். விழுப்புரம் உட்பட இரண்டு ஊர்களில் அவருடன் சேர்ந்து தேநீர் குடித்தேன். தஞ்சாவூரில் அந்த நபர் எனக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். 

சிறிது நேரத்தில் தான் மயங்கிவிட்டேன், என்றார். தற்போது மோதிரங்கள் ,சூட்கேசில் இருந்த பொருட்கள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை என்றார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி மூலம்; தினசரி நாளிதழ்கள்

No comments :

Post a Comment