(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 12, 2015

முதுகுளத்தூரில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

No comments :
முதுகுளத்தூர் வட்டம் செல்வநாயகபுரம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் திறந்து வைத்தார்.
ஊராட்சித் தலைவர் கே.ஜீவன் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் கே.ஜெயக்கண்ணு, சி.பத்மாவதி, ஒன்றியக் கவுன்சிலர் கே. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஏ.ஜோசப்ராஜ் வரவேற்றார்.

ஆசிரியர் கே.வெங்கடசுப்பிரமணியம் அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் கிராமத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன், செயலர் கே.ஜெகநாதன், பொருளாளர் பி.நவநீதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.முத்துச்சாமி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எம். ஜெமீலா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்
செய்தி: தினமணி

No comments :

Post a Comment