(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 3, 2015

ஏர்வாடி தர்கா உண்டியலில் திருடியவர் கைது

No comments :
ஏர்வாடி தர்கா உண்டியலில் நூதன முறையில் திருடியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஏர்வாடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் மகன் அப்துல்சமது (38). இவர் 30.1.2015 அன்று ஏர்வாடி தர்கா உண்டியலில் கயிற்றில் இரும்பை கட்டி ரூபாய் நோட்டுகள் அதில் ஒட்டிக் கொள்வதற்காக பசையை தடவி நூதன முறையில் பணத்தை திருடினார்.
இது அப்போது கேமராவில் வீடியோ படம் எடுக்கப்பட்டு வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டி தலைவர் அம்ஜத்ஹூசைன் கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸார் வழக்குப் பதிந்து அப்துல்சமதை கைது செய்தனர்.
செய்தி: தினமணி

No comments :

Post a Comment