(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 28, 2015

தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகம்!!

No comments :

தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1–ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 40 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 10 ஆயிரம் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகளுக்கும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக ஆண்டு தோறும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.

1 முதல் 9 வகுப்புவரை படிக்கும் 45 லட்சம் மாணவமாணவிகளுக்கு இந்த வருடம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 52 லட்சம் பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க தயாராக உள்ளன. 1 முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவமாணவிகளுக்கு இலவச சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அரசு வழங்கும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனுப்பப்பட்டு அதனை தலைமை ஆசிரியர்கள் குடோனில் இருந்து பள்ளிக்கு எடுத்து சென்று விட்டனர். ஒரு சில பள்ளிகளில் நாளைக்குள் எடுத்து சென்று விடுவார்கள்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா மற்றும் இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகின்றன. திங்கட்கிழமை பள்ளிகள் திறந்தவுடன் மாணவமாணவிகளுக்கு இவை அனைத்தும் வழங்கப்படும்.

செய்தி: பள்ளி கல்வி துறை

No comments :

Post a Comment