(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 5, 2015

பெரியபட்டினத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு!!

No comments :
பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி, அக்கிராமத்தினர் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரியபட்டினம் காந்தி நகரில் அரசு மதுக்கடை உள்ளது. இக்கடைக்கு அருகிலேயே அனுமதி இல்லாத மதுக்கூடமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன.இந்த மதுக் கடையால் அப்பகுதியில் பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும், தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.   எனவே, உடனடியாக இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என, பெரியபட்டினம் கிராமப் பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் எஸ். புரோஸ்கான் தலைமையில், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment