(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 1, 2015

கீழக்கரையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள், லெட்சுமிபுரத்தில் வீட்டை உடைத்து கொள்ளை!!

No comments :
கீழக்கரை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவது மனைவி உத்தரம்மாள் கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் காஞ்சிரங்குடி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.


இதுகுறித்து உத்தரம்மாள் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினகரன்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment