(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 1, 2015

கீழக்கரையில் கோவில் உண்டியல் திருட்டு, போலீஸ் விசாரணை!!

No comments :
கீழக்கரை இந்து பஜாரில் அரியநாத சுவாமி கோயில் உள்ளது. 

இக்கோயிலை நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பூசாரி கார்த்தி பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். 


நேற்று காலை அவர் கோயிலுக்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி ராஜாங்கம் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். இந்த உண்டியலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களையும், பணத்தையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதனால் உண்டியலில் லட்சக்கணக்கிலான மதிப்பில் திருடு போயிருக்கும் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து கீழக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment