(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 26, 2016

விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற நவ.,30க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016--17ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லுாரி, பல்கலையில் படிக்கும் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கல்லுாரி, பல்கலை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

கடந்த 2015 ஜூலை 1 முதல் 2016 ஜூன் 30 வரையிலான காலத்தில் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற தகுதியும், திறனும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள், அகில இந்திய பல்கலை இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 10 ரூபாய் செலுத்தி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் பெறலாம். 

இணையதளத்தில் பெறும் விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கு உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற பெயரில் அஞ்சல் ஆணையாகவோ, அல்லது டி.டி., இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் நவ.,30க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment