(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 9, 2015

கீழக்கரை- ராமநதபுர சாலையில் விபத்து, வாலிபர் உயிரழப்பு

No comments :
ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த ஜிந்தா முகம்மது மகன் சகுபர்சாதிக் (16). இவரும், நேரு நகர் 5ஆவது தெருவில் வசிக்கும் செல்வம் மகன் சரவணன் (14) ஆகிய இருவரும், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகுபர் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சரவணன் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து, உயிரிழந்த சகுபர் சாதிக்கின் சகோதரர் அக்பர் அலி அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment